ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜேர்மனி அரசு…..

0

ரஷ்யா மனித உயிர்களுடன் விளையாடுவதாக ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, ரஷ்யா, உக்ரைனில் வாழும் பொதுமக்களின் உயிர்களுடன் பொறுப்பற்ற முறையில் விளையாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், தான் அவசரமாக ரஷ்ய அரசுக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ள ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, மனித உயிர்களுடன் விளையாடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

பிரஸ்ஸல்சில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றிற்காக வந்துள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 72 மணித்தியாலத்தில் நாம் பார்த்துள்ள தாக்குதல்கள் கவலையை ஏற்படுத்துகின்றன.

இதற்கு ரஷ்ய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஆகவேதான் நான் அவரசமாக ரஷ்ய அரசை அழைக்கிறேன் ’பேச்சு வார்த்தைக்கு வாருங்கள், எல்லாம் உங்கள் கையில்தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here