ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம்

0

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் திகதியில் இருந்து போர் தொடுத்து வருகின்றது.

ஒவ்வொரு நாளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

உலக நாடுகள் தனிமைப்படுத்தினாலும், ரஷ்யா தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதற்கிடையே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்-அப் போன்றவைகளில் கருத்துக்களும், எதிர்ப்புக்களும் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பல இடங்களில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

உக்ரேன் போருக்கு எதிரான எதிர்ப்புக் கருத்துகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்து வருவதால் ரஷ்யா இந்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here