ரஷ்யாவில் பயங்கர விபத்து! குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

0

ரஷ்யாவின் சகலின் தீவில் Tymovskoye நகரில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விபத்தினால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கட்டிடத்தில் வசித்ததாக அறியப்பட்ட 33 பேரில் சிலர் மாயமாகியுள்ளதாக சகலின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு 500,000 ரூபிள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here