ரஷ்யாவில் காதலியின் தலையை வெட்டி கொன்ற காதலனின் மோசமான செயல்

0

ரஷ்யாவிலுள்ள Novodvinsk என்ற இடத்திலுள்ள பனி நிறைந்த வனப்பகுதியில் ஒரு பெண்ணின் தலையற்ற உடல் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அது Olga Shlyamina (33) என்ற பெண்ணின் தலை என பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

ஏற்கனவே Olgaவை ஐந்து நாட்களாக காணவில்லை என அவரது பெற்றோர் பொலிசில் புகாரளித்துள்ளனர்.

இந்நிலையில், அவரது தலையற்ற உடல் கிடைத்ததையடுத்து அவரது குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.

Olgaவுக்கும் அவரது கணவரான Vyacheslav வயது 40 சமீபத்திய சில நாட்களாக பிரச்சினை இருந்துவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது கணவரை பிரிய அவர் திட்டமிட்டுவந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரச்சினைக்கு காரணம் என்னவென்றால், சமீபத்தில் உள்ளூர் அழகிப்போட்டி ஒன்றில் Olga வெற்றி பெற்றுள்ளார்

அப்போது தன்னுடன் வேலை செய்த ஒரு ஆணுடன் நெருங்கிப் பழகியதாக கூறி அவருடன் சண்டை போட்டுள்ளார் Vyacheslav.

அழகிப்போட்டியில் வென்றதால், அதைப் பயன்படுத்தி தன் மனைவி வேறு ஆண்களுடன் பழகலாம் என அஞ்சிய Vyacheslav, Olgaவை தாக்கி கொலை செய்ததாக கருதப்படுகிறது.

வாக்கிங் செல்வதாகக் கூறி மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து, தலையை வெட்டி அவரது உடலை Vyacheslav பனியில் புதைத்தாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் Vyacheslav தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என காவற்றையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here