ரஷ்யாவிற்கு பயணத்தடை விதித்துள்ள ஜேர்மனி

0

ரஷ்யாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் என ஜேர்மனியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய படை தொடர்த்து நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்நிலையில், ​​ரஷ்யாவிற்கு பயணம் செய்வதை எதிர்த்து ஜேர்மனி தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனை ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக உக்ரைன் நாட்டுடன் எல்லையை பகிரும் தெற்கு ரஷ்ய பகுதிகளுக்கு ஜேர்மன் மக்கள் பயணிக்க வேண்டாம் என எச்சரித்ததுள்ளது.

ரஷ்யாவில் ரஷியன் அல்லாத கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜேர்மன் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்கவும் உடனடி தடை அறிவித்துள்ளது.

இந்த தடை பெப்ரவரி 27 முதல் அடுத்த 3 மாதங்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here