ரஷ்யாவின் மற்றுமொரு போர் குற்றம் – உக்ரைன் ஜனாதிபதி

0

கிரமஸ்ரோஸ்க் நகரிலுள்ள தொடருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இது ரஷ்யாவின் மற்றுமொரு போர் குற்றம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக நேற்றிரவு விசேட உரை நிகழ்த்திய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உக்ரைன் ஜனாதிபதியின் தரவுகளுக்கு அமைய, ரஷ்யாவினால் நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் 38 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் 5 சிறுவர்களும் அடங்கியுள்ளனர்.

அத்துடன் மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்கால விசாரணைகளை ரஷ்யா பொறுப்பேற்க தயாராக வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

புச்சா பகுதியில் இடம்பெற்றதை போன்றே, கிரமஸ்ரோஸ்க் நகரிலும் ரஷ்யா போர் குற்றத்தை புரிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரஷ்யாவிலுள்ள போலாந்து தூதரக அதிகாரிகள் 45 பேரை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.

போலாந்தில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here