
உக்ரைன் பொதுமக்கள் மெலிட்டோபோல் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்யப் படையினரை அவர்களின் நாட்டுக்குச் செல்லும்படி முழக்கமிட்ட படி போராட்டத்தி ஈடுப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் தென்பகுதியில் அசோவ் கடலையொட்டி உள்ள நகரான மெலிட்டோபோலை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
நகரின் முதன்மையான சதுக்கத்தில் உக்ரைன் கொடிகளை ஏந்தியபடி திரண்ட மக்கள் ரஷ்யப் படையினரை அவர்களின் நாட்டுக்குச் செல்லும்படி முழக்கமிட்டனர்.
ரஷ்ய வீரர்கள் வான்நோக்கித் துப்பாக்கியால் சுட்டு அவர்களை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.