கனடாவில் கால்கரியில், நேற்று மதியம் 1.00 மணியளவில் ஒருவர் ரயில் பாதையில் ஜாகிங் சென்று கொண்டிருந்துள்ளார்.
குறித்த நபருக்கு பின்னால் ரயில் ஒன்று வந்துள்ளது.
மக்கள் அவரை எச்சரிக்க குரல் எழுப்பியும் அவர் அதை கவனிக்கவில்லை.
வேகமாக வந்த அந்த ரயில் அவர் மீது மோத, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.
40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனது காதுகளில் இயர்போன் மாட்டியிருந்திருந்ததாக கூறப்படுகிறது.
அதனால், அவருக்கு ரயில் வந்த சத்தமோ, அல்லது மக்கள் எழுப்பிய சத்தமோ கேட்கவில்லையோ என்னவோ தெரியவில்லை.
அவரது பெயர் வெளியிடப்படாத நிலையில், பொலிசார் அந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.