ரயில் தடம்புரண்டதில் ஒருவர் பலி… 40 பேர் படுங்காயம்

0

தெற்கு பாகிஸ்தானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை லாகூர் செல்லும் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டு, விபத்து ஏற்பட்டது.

15-அப் கராச்சி எக்ஸ்பிரஸ், கராச்சியில் இருந்து லாகூருக்கு செல்லும் வழியில் தெற்கு சிந்து மாகாணத்தில் ரோஹ்ரி மற்றும் சாங்கி நிலையங்களுக்கு இடையே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டன.

விபத்தில் ஒரு பெண் உயரிழந்தார் மற்றும் 40 பேர் காயமடைந்தனர், கராச்சி-லாகூர் ரயில்களை மூன்று முதல் 10 மணி நேரம் தாமதப்படுத்தியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தினையடுத்து மீட்கப்பட்டவர்கள் உள்ளூர் மக்களின் உதவியுடன் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தடம் புரண்டதற்கான காரணத்தை அறிய இந்த விபத்து குறித்து விசாரிக்கப்படும் என்று ரயில்வே திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here