ரயிலில் பயணிக்கும் பிரான்ஸ் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

0

பிரான்ஸில் தானியங்கி SNCF டிக்கெட் இயந்திரங்களில் ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் போது அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்பு இல்லாமல் தானியங்கியாக இயங்கும் டிக்கட் இயந்திரங்களை மர்ம நபர்கள் சிலர் குறி வைத்துள்ளனர்.

இதனை பொலிஸார் கண்டுபிடித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிக்கட்களுக்காக மக்கள் தானியங்கி இயந்திரங்களில் பணத்தை செலுத்தும் போது அதனை கொள்ளையடிப்பதற்கு கும்பல் ஒன்று இயங்குவதாக தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளை கும்பல் ரயில் நிலையங்களில் போலி இயந்திரங்களை நிறுவியுள்ளனர்.

மக்கள் உண்மையான இயந்திரம் என நினைத்து பணம் செலுத்தி ஏமாறுவதாக தெரியவந்துள்ளது.

இந்த போலி இயந்திரங்கள் உண்மையான இயந்திரங்கள் போன்றே வடிவமைக்கப்பட்டு உள்ளது.

முறையான தொடர்பு இல்லாத கட்டணச் சாதனங்கள் நீல நிற ஒளியுடன் மஞ்சள் நிறத்திலும்,

போலியானவை வெறும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த போலி பெட்டிகள் அதிகளவில் இல் து பிரான்ஸிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதி ரயில் பயணிகள் அவதானமாக செயற்பட வேண்டும்.

சந்தேகம் இருந்தால், தானியங்கி சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக அட்டையின் ஊடாக பணத்தை செலுத்தி டிக்கட் பெற முயற்சிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் பணத்தை இழந்துவிட்டதாக நம்பும் மக்கள் வங்கியைத் தொடர்புகொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here