ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

0

ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட வலையமைப்புக்களை வலுப்படுத்தும் அதே வேளை, கட்சியின் தனித்துவத்தின் கீழ் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிப்பதற்கான புதிய வேலைத்திட்டங்களையும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்புடைய சகல வலையமைப்புக்களையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளாத, அரசாங்கத்திற்கு எதிராகவுள்ள சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய வலையமைப்புக்களை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன, உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டவர்களில் கண்காணிப்பின் கீழ், கொவிட் நிலைமைக்கு ஏற்றவாறு மேற்குறித்த வலையமைப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்துறையினர் அமைப்பு, பல்கலைக்கழக பேராசிரியர் மன்றம், அரச மற்றும் தனியார் தொழிற்சங்கள் உள்ளிட்ட சகல அமைப்புக்களையும் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கமைய துரிதமாக வலுப்படுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட வலையமைப்புக்களை வலுப்படுத்தும் அதேவேளை , கட்சியின் தனித்துவத்தின் கீழ் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிப்பதற்கான புதிய வேலைத்திட்டங்களையும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துமாறும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here