ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா?

0

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமியை தனது அடுத்த படத்தின் இயக்குனராக்கும் முடிவில் ரஜினி இருப்பதாக சொல்லப்படுகிறது.

துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு

பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் திரைப் பிரபலங்கள் பலரால் பாராட்டப்பட்டது.

இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் பாராட்டியுள்ளார்.

இது சம்மந்தமாக தேசிங்க் பெரியசாமியிடம் ரஜினி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் எனக்கும் ஏதாவது கதை தயார் செய்யுங்கள் எனக் கூறி இருந்தார்.

இதற்கடுத்து நடந்த சந்திப்பில் தேசிங் பெரியசாமி ரஜினிக்காக ஒரு கதையை சொல்லி இருந்தாராம். இப்போது அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு அந்த படத்தில் நடிக்கலாமா என்று ரஜினிகாந்த் யோசனையில் உள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here