ரொனால்டோ தற்போது மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
இங்கிலாந்தின் லிவெர்பூலில் உள்ள Goodison Park மைதானத்தில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் எவெர்ட்டன் அணிகள் மோதின.
எதிர்பாராத வகையில் ரொனால்டோவின் மான்செஸ்டர் யுனைடெட் அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து.
இதனால் மிகுந்த விரக்தியுடன் ரொனால்டோ பெவிலியனுக்கு திரும்பியபோது, ரசிகர் ஒருவர் அவர் முன் செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றார்.
அப்போது கோபத்தில் இருந்த ரொனால்டோ அவரது செல்போனை கீழே தட்டிவிட்டார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. ரொனால்டோவின் இந்த செயல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
இந்நிலையில், தனது செயலுக்கு மன்னிப்புக் கோரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ பதிவிட்டுள்ளார்.
அதில், ‘கடினமான தருணங்களில் உணர்ச்சிகளை கையாள்வது எளிதல்ல.
ஆயினும் மரியாதையுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.
மேலும் அழகான இந்த விளையாட்டை விரும்பும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
என் கோபத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். முடிந்தால் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெறும் போட்டியை வந்து காணுமாறு அந்த ரசிகரை கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
