ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கனேடிய பிரதமர்….! காரணம் இதுதான்

0

கனடாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

கனடாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன.

பொதுமக்களுக்கு இரு டோஸ் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

லொரி ஓட்டுனர்கள் ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணம் செல்லவும், அமெரிக்க எல்லையை கடக்கவும் 2 டோஸ் தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது.

2 டோஸ் போடாத ஓட்டுனர்கள் லாரிகளை இயக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அதிகளவிலான பொதுமக்கள், லாரி ஓட்டுநர்கள் என பலர் தலைநகர் ஒட்டாவாவில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ட்ரூடோ, தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடத்திற்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here