இந்தியாவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா.
இவர் திருச்சி எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன்.
இந்த தம்பதி கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு 13 வயதில் ஷிவானி என்ற மகள் உள்ள நிலையில் தனியார் பாடசாலையில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
இவர் உடல் எடையை குறைக்க தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகளை எடுத்து வந்துள்ளார்.
இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் தொடர்ந்து மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில் சிவானி நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு தன்னுடைய அறைக்கு சென்ற அவர் இன்று காலை வரை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது சிவானி தூக்கில் தொங்கி உள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.
ஷிவானி தற்கொலை செய்ய முடிவு செய்து யூடியூப் மூலம் எவ்வாறு தற்கொலை செய்து கொள்வது குறித்த வீடியோக்களை பார்த்து இவ்வாறு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.