ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு குழாயின் மூலம் விநியாகிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவ்வாறு சப்ளை செய்யும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறியுள்ளது.
யுரெங்கோய்ஸ்கோயே பகுதியில் உள்ள எரிவாயு குழாயில் வெடி விபத்து ஏற்பட்டதாக கேஸ்ப்ரோம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
