யாழ்.வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்கள் நிரம்பியுள்ளனர்- கடும் நெருக்கடிக்குள் யாழ்.மாவட்டம்

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள விடுதிகள் மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆகியவற்றில் கொரோனா நோயாளிகள் முழுமையாக நிரம்பி காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீபவானந்தராஜா மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்.போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலவரத்தின்படி, விடுதிகள் மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் எல்லாமே கொரோனா நோயாளிகளால் நிரம்பியிருக்கின்றன.

இங்கு போதிய வளங்கள் இல்லாதப்போதிலும் எங்களது சேவைகளை நாம் முன் கொண்டு செல்கின்றோம். வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

மேலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், வைத்தியசாலை மிகவும் இக்கட்டான நிலைமையில் உள்ளது.

வைத்தியசாலைக்குத் தேவையான ஒக்சிஜன் சிலிண்டர்கள், 2 மடங்காக அதிகரித்துள்ளது. நாங்கள் இதுவரை ஒக்சிஜன் சிலிண்டரை பெற்றுக்கொள்ள அனுராதபுரத்திற்கு மாத்திரமே சென்றிருந்தோம். ஆனால் அங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால், நேற்று முதல் கொழும்புக்கும் செல்லுகின்ற நிலை உருவாகியுள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here