யாழ் மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

0

யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி அட்டை வைத்திருப்பது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட கோவிட் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

யாழ். மாவட்டத்தில் தற்பொழுது கோவிட் தொற்று நிலைமையானது சற்று தீவிரம் பெற்று காணப்படுகின்றது. நேற்றைய பரிசோதனையின்போது 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 137 கோவிட் மரணங்கள் இன்றுவரை யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அந்தவகையில் 2,445 குடும்பங்களைச் சேர்ந்த 6969 பெயர் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

வேலணை, பருத்தித்துறை பிரதேசத்தில் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த நிலைமையில் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும். தற்போது ஆலய வழிபாடுகள் ஊடாக மக்கள் ஒன்று சேர்வது அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மதித்து தங்களுடைய குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் ஆலய நிர்வாகிகளும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றபடுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போதைய நிலைமையில் 100 பேருக்கு உட்பட்டவர்களின் பங்கு பற்றுதலோடு உள்வீதி வலம் வர மாத்திரமே ஆலயங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை மதித்து நடந்துகொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here