யாழ்.மாவட்டப் பொலிஸ் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டிகள்

0

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதம பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை(19) காலை நடைபெற்றது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றதுடன் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜெகத் பளிகக்கார பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பொலிஸ் நிலையங்களுக்கான முச்சக்கர வண்டிகளை சம்பிராதயபூர்வமாக வழங்கி வைத்தார்.

நாட்டில் சட்டம், ஒழுங்கை நடைமுறைப்படுத்திக் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் முகமாக நாட்டின் பிரதமர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் நாடு பூராகவும் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களுக்கென முச்சக்கரவண்டிகள் கையளிக்கப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டத்திற்கு 40 முச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here