யாழ்.மாவட்டத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு!

0

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திராஜா (வயது-63) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று(14) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த நபரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

அதேசமயம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாவலியை சேர்ந்த 42 வயதான நபர் ஒருவரும் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

அவருடைய சடலம் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டிருக்கின்றது.

கடந்த சில நாட்களாக யாழ். மாவட்டத்தில் கொகொரோனா உயிரிழப்புகள் இல்லாதிருந்த நிலையில் மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here