யாழ். மாநகர சபையின் முதல்வர் சுயதனிமைப்படுத்தலில்..

0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக்கொண்டதாக அறிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்டுள்ளது.

குறித்த திருமண வைபத்தில் தானும் கலந்துகொண்டமையினால் தன்னை தானே சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அவர் அறித்துள்ளார்.

அத்தோடு, பி.சி.ஆர் பரிசோதனையும் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த காலப்பகுதியில் தற்னோடு தொடர்புகொண்டவர்கள் அவதானமாக இருக்குமாறு வி.மணிவண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் காரணமாக இன்றைய தினம் இடம்பெறவிருந்த மாநகர சபை அமர்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here