யாழ்.மாநகரசபையில் திலீபனுக்கு மெளன அஞ்சலி

0

யாழ். மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை(28.09.2021) சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்.மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற சபை அமர்வின் ஆரம்பத்தில் தியாகதீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினர்கள் குறித்த மெளன அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளாத நிலையில் யாழ்.மாநகரசபை முதல்வர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று இரண்டுநிமிட மெளன அஞ்சலி செலுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here