நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை நாளை தொடக்கம் மறு அறிவித்தல் வரையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே. நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.
இன்றுடன் மூன்று தினங்களாக பதவி உயர்வு , இடர்கால கொடுப்பனவு , சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குமாறு கோரி இலங்கையின் சுகாதார தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.