யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் அறிவிப்பு

0

கொரோனா தொற்று பரவல் அபாயம் காரணமாக வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற சாதாரண நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறலாம் என பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தொிவித்திருக்கின்றார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் தற்சமயம் ஓரளவு குறைவடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் வழக்குத் திரும்பி கொண்டிருக்கின்றது.

வைத்தியசாலையின் கொரோனா விடுதிகளில் நாளொன்றுக்கு 30 க்குக் குறைவான நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்ற நிலையிலும் மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் கொரோனா பரவல் அபாய நிலைமை காரணமாக வைத்தியசாலைக்கு செல்லாத சாதாரண நோயாளர்கள் மற்றும் நோய்களுக்காக மருந்துகளைப் பெற்றுக் கொண்டிருப்போர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளைப் பெற முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here