இலங்கைக்கான கனடா துாதுவர் David McKinnon தலைமையிலான குழுவினர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இது குறித்து போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி கூறுகையில், ”யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்த இலங்கைக்கான கனடா துாதுவர் தலைமையிலான குழவினர் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் மற்றும் தற்போதுள்ள கொரோனா நிலவரம் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.
மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.
