யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை தேர்வு செய்யுமாறு கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாயில் கதவைக் பூட்டி மாணவர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய தினம் பரீட்சை இடம்பெறுவுள்ளதால் வாசல் கதவை திறக்குமாறும், பிரச்சினைகள் தொடர்பில் பேச இன்று சந்தர்ப்பம் வழங்கப்படும் என துணைவேந்தர் கோரியபோதும், 4 மாதமாக எழுத்தில் முன்வைத்த கோரிக்கை ஏற்கவில்லை என தெரிவித்து மாணவர்கள் போராட்டம் தொடர்கின்றது.

