யாழ். பல்கலைக்கழகத்தில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு

0

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று அதிகாரிகளில் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல்கலைக்கழகப் பணியாளர்கள் மற்றும் கடந்த 8 ஆம் திகதி குறித்த மாணவர் ஒழுக்காற்று அதிகாரி பங்கு பற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், எழுமாற்று பரிசோதனைக்கு உடன்பட்டவர்கள் உட்படப் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த சுமார் 55 பேர் மற்றும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவியின் வகுப்பு மாணவிகள் சிலர் உட்பட 75 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் அவர்களிடமிருந்து இன்று யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்குரிய மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

இந்த மாதிரிகள் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here