யாழ் பல்கலைகழகத்திற்கு அருகில் பரபரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்!

0

யாழ்ப்பாணம் – பரமேஸ்வர சந்திப்பகுதியில் கும்பல் ஒன்று இளைஞன் ஒருவரை துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

யாழ். நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை வழி மறித்து கடுமையான வாள் வெட்டினை மேற்கொண்டனர்.

கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து, பல்கலைகழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும், துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளனர்.

வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றமை மாணவர்கள் மத்தியில், அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here