யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் விபத்தில் மரணம்

0

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன், இன்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து, கோப்பாய் இராச வீதி கிருஷ்ணன் கோவில் சந்தியில் இன்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கரவெட்டியில் உள்ள வீட்டிலிருந்து , கல்வியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தபோதே குறித்த விபத்து இடம்பெறுள்ளது.

நாட்டில் மின்சாரம் தடைபட்ட வேளையில், வீதியில் வெளிச்சம் இன்றி நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதி விபத்து நேரிட்டதாகத் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here