யாழ் தமிழ் இளைஞர்கள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இலங்கை இராணுவத்தில் சேர்த்க்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியள்ளது.

யாழ்ப்பாண படைத்தலைமையகத்தில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் பிரிவினைவாதத்துக்கு ஆதரவாக மக்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதை இன்னும் காணக்கூடியதாக உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் சேர முன்வந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகும்.

அத்துடன், கொரோனா தொற்றின்போது பொது மக்களுக்கு தேவையான தனிமைப்படுத்தல் வசதிகளை வழங்குவதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் செய்த சேவையையும் இராணுவ தளபதி இதன்போது பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here