யாழ். தனியார் மருத்துவமனையில் இருதய சத்திரகிகிச்சை மேற்கொண்டவர் உயிரிழப்பு!

0

யாழ்ப்பாணம் தனியார் மருத்துமனையில் இடம்பெற்ற இருதய சத்திரசிகிச்சையில் ஒருவர் உயிரிழந்தார்.

திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இருதய வால்வு சத்திரசிகிச்சையின் போதே உயிரிழப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சங்கானை தொட்டிலடியைச் சேர்ந்த 37 வயதுடைய வைத்தியலிங்கம் கஜூரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இருதய வால்வு சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட அதிகளவு குருதிப் போக்கே உயிரிழப்புக் காரணம் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சகல வசதிகளுடன் கூடிய இருதய அறுவைச்சிகிச்சை கூடம் உள்ள போதும் மாதத்தில் குறிப்பிட்டளவு சத்திரசிக்சையே மேற்கொள்ளப்படும் நிலையில் தனியார் மருத்துவமனையை நாடும் நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here