யாழ். குடாநாட்டில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கை

0

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண குடாநாட்டில் முக்கிய வீதிகளில் பொலிஸார் இன்று ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது அத்தியாவசியத் தேவை தவிர்ந்து வீதிகளில் பயணித்தோர் எச்சரிக்கை செய்து வீடுகளிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

அத்தோடு அத்தியாவசிய தேவையின் பொருட்டு வீதியில் பயணம் செய்தோரும் தமது பணி அடையாள அட்டை மற்றும் தமக்குரிய அனுமதிப் பத்திரங்களை காண்பித்த பின்னர் வீதியால் பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட பொலிஸ் அணியினரால் குறித்த நடவடிக்கையானது யாழ்ப்பாண நகரத்தின் முக்கியமான வீதிகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here