யாழ். கரவெட்டியில் இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

0

யாழ்ப்பாணம் – கரவெட்டியில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர், நேற்று மாலை திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.

கரவெட்டி – கலட்டி கீரிப்பல்லி பகுதியை சேர்ந்த, 26 வயதுடைய விக்கினேஸ்வரமூர்த்தி நிதர்சன் எனும், தேசிய சேமிப்பு வங்கி காவல் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்தார்.

கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு முன்பாகவுள்ள, நுகவில் வயலில் தனது சகோதரருடன் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென்று மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

அதனையடுத்து, உடனடியாக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு, இளைஞர் கொண்டு செல்லப்பட்ட போதும், வழியில் உயிர் பிரிந்துள்ளது.

அவருக்கு, உடனடியாகவே அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நெல்லியடி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here