யாழ். கடற்கரையோரங்களில் தொடர்ந்து கரையொதுங்கும் சடலங்கள்!

0

யாழ்ப்பாணம், மருதங்கேணி கடற்பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

நான்கு நாட்களில் கரையொதுங்கிய நான்காவது சடலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை, மணற்காடு ஆகிய கரையோரத்தில் இரு சடலங்களும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு சடலமும் கரையொதுங்கியுள்ள நிலையில் இன்றையதினம் மருதங்கேணி கடற்பகுதியிலும் ஒரு சடலம் இவ்வாறு கரையொதுங்கி உள்ளது.

கரையொதுங்கிய நான்கு சடலங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன.

சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here