யாழ் கடற்கரையில் பரபரப்பு! ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…!

0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் நேற்று மாலை போத்தல் மிதந்த வந்து கரையொதுங்கியுள்ளது.

அதனை கண்டெடுத்து எடுத்து 20 பேர் வரை அதனை பருகியுள்ளனர்.

அருந்தியவர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஸ்ரீகுமார் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தை அடுத்து சிலர் தாமாகவே வைத்தியசாலைக்குச் சென்று தம்மை பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் குறித்த போத்தலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here