யாழ். ஏழாலை புவனேஸ்வரி அம்பாளுக்கு இன்று கொடியேற்றம்

0

ஏழாலை’ எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் யாழ்.ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(02-08-2021) காலை-08 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

தொடர்ச்சியாகப் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவம் நடைபெறும்.
மஹோற்சவத்தில் எதிர்வரும்-10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-07 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் புதன்கிழமை ஆடிப்பூர நன்னாளன்று காலை-07 மணியளவில் தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

இதேவேளை, தற்போதைய கொரோனாத் தொற்றுப் பரவல் நிலையைக் கருத்திற் கொண்டு கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இவ்வாண்டு மஹோற்சவம் இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here