யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் சற்று முன்னர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதியான நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக சாவகக்சேரி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
பிரகாஷ் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை நேற்று சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டிருந்தார்.
கடந்த ஐந்து நாட்களாக இலேசான தலைவலி காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தேன் சற்று தேறிவரும் நிலையில் இன்று அன்டிஜன் பரிசோதனை மூலம் கொரோனா உறுதியாகியுள்ளது குணமடைந்த பின்னர் எனது பணிகள் தடையின்றி தொடரும் என அவர் பதிவிட்டிருந்தார்.