யாழ் – இந்திய விமான சேவை கட்டண விபரங்கள்-அதிர்ச்சியில் மக்கள்

0

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணம் – திருச்சிக்கு இடையேயான ஒருவழி பயணத்திற்கான விமான கட்டணம் 40,000 ரூபாயாகம், சென்னை – யாழ்ப்பாணம் இடையே 50,000 ரூபாயாகவும் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானக் கட்டணங்கள் பயணிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதால், பயணிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாண மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விமானப் பயணங்களுக்கான டிக்கெட்டுகள் இம்மாதம் 21ஆம் திகதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்ட போது, ​​யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான கட்டணம் 26,000 ரூபாயாக காணப்பட்டது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜுலை மாதம் முதலாம் திகதி மீளவும் திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விமானக் கட்டணத்தை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ்ப்பாண மக்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here