யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைத்த அதிஷ்டம்

0

புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் படி கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் ​அதிகரிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் 19ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.

யாழ்.மாவட்டத்திற்கு ஒரு பாராளுமன்ற ஆசனம் சேர்க்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் யாழ் மாவட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 6ல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்படும்.

அடுத்த தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here