யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் தடம்புரண்ட பேருந்து- பலர் படுகாயம்..!

0

காரைநகர் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கல்லுண்டாய் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பகுதியில் வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் காலை மழை பெய்ததன் காரணமாக வீதி வழுக்கும் தண்மையுடன் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேகமாக வந்த பேருந்து அப்பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த பேருந்தின் சாரதி தப்பி ஓடியுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here