யாழ்ப்பாணத்தில் மது விற்பனை நிலையங்களுக்கு சீல் வைப்பு

0

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ளபோது யாழ்ப்பாணத்தில் உள்ள சில மதுபானக் கடைகளில் இருந்து இரகசியமாக மது விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மறு அறிவிப்பு வரும்வரை குறித்த மது விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்க யாழ்ப்பாணம் பொது சுகாதார ஆய்வாளர்கள் அலுவலகம் மற்றும் யாழ்ப்பாண கலால் அலுவலகம் முடிவு செய்தன.

மேலும் கடை உரிமையாளர்களால் அதிக விலைக்கு மதுபானம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது குறித்து வந்த முறைப்பாட்டை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொது சுகாதார ஆய்வாளர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் COVID பரவுவதை கட்டுப்படுத்த தங்கள் ஆதரவை வழங்குமாறு மதுக்கடை உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here