யாழ்ப்பாணத்தில் நாய் கடித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

0

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாய் கடித்த நிலையில் உரிய தடுப்பூசியை பெறாமையால் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த நபரை கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தடுமாற்றம், தண்ணீரை கண்டால் பயம் போன்ற நிலை உருவானதால், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை அவரை கடித்த வளர்ப்பு நாய் மறுநாளே உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here