யாழ்ப்பாணத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்

0

யாழ்ப்பாணத்தில் டயகம சிறுமியான கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம், பேரணியாக புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்துள்ளது.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

அதன்பின்னர் கடந்த 3ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

மேலும் சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையிலேயே இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here