யாழ்ப்பாணத்தில் கார்த்திகை மலர்களால் ஏற்பட்ட சர்ச்சை…

0

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் தமிழீழ தேசியப்பூவான கார்த்திகை மலர்களை அணிந்தமை சர்ச்சைகளின் மையமாகியுள்ளது.

நல்லூரிலுள்ள கிட்டு நினைவு பூங்காவில் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சரான பொ.ஜங்கரநேசனது தமிழ் தேசிய பசுமை இயக்கமெனும் அமைப்பு நடத்திய மலர் கண்காட்சியிலேயே இந்திய இராஜதந்திரிகள் கார்த்திகைப் பூவை தனது மேலங்கியில் அணிந்த விடயம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடை பெற்ற பசுமைக் கண்காட்சி மற்றும் மரக்கன்றுகள் விநியோக நிகழ்வு தொடர்பான பல தவறான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தமை கவனத்திற்கு வந்துள்ளன.

யாழ். இந்தியத் துணைத் தூதுவர் அவர்கள், அழைப்பின் பேரில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அத்தகைய பங்கேற்பு அமைப்பாளர்கள் அல்லது அவர்களின் செயல்களுடன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிக்கு வெளியே, எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை.

இது தொடர்பில் அவருக்கு எந்த முன் அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனவும் அறியத்தரப்படுகிறதென இந்திய துணைதூதரகம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here