யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணம்- ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இராணுவ சிப்பாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவதத்தில் வெலிமடையைச் சேர்ந்த குணசேகர (வயது 33) என்ற இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார்.

யாழ்பாணத்தில் பணிப்புரிந்து வந்த அவர், கடந்த 19 ஆம் திகதி விடுமுறையில் பேருந்து ஊடாக தனது வீட்டை நோக்கி பயணித்தபோது, உரும்பிராய் பகுதியில் திடீரென வீதியின் குறுக்கே ஓடிய நாயினை அவதானித்த பேருந்து சாரதி உடனடியாக பிரேக் அடித்துள்ளார்.

இதன்போது பேருந்தில் இருந்த சிப்பாய், நிலைதடுமாறி வீதியில் விழுந்து படுகாயமடைந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here