யாழில் 2 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை!

0

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இரண்டாம் நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ் மாவட்டத்தில் 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு 12 தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் தடுப்பூசி வழங்கல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட யாழ் பரியோவான் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு பொது மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து தமக்குரிய தடுப்பூசி மருந்துகளை பெற்று செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.

குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி நிலையத்திற்கு வருகை தந்து தமக்குரிய தடுப்பூசியினை பெற்றுச் செல்வதையும் காணக்கூடியதாகவுள்ளது.

குறித்த தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் ராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்து தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை பார்வையிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here