யாழில் 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

0

தனது வீட்டில் வளர்ந்து வந்த ஆட்டுக்கு குழை வெட்டச் சென்ற நிலையில் கிணற்றில் தவறி வீழ்ந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6-00 மணியளவில் வடமராட்சி இமையாணன் பகுதியில் இடம்பெற்றுள்ளது

ஜெகன் கஜனிகா என்ற 16 வயதுச் சிறுமியே உயிரிழந்துள்ளார். வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டுக்கு குழை வெட்டச் சென்ற சிறுமி, கிணற்றுக் கட்டில் ஏறி நின்று பூவரசம் குழை வெட்டியுள்ளார்.

அப்போது கால் இடறி அவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.சிறுமி மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here