யாழில் வீட்டிலேயே பிறந்த குழந்தை உயிரிழப்பு? தாய், தந்தை கைது

0

யாழில் வீட்டில் பிறந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வசித்து வந்த மாத்தளையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் பெற்றோர்களான தம்பதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் கடந்த 22 ஆம் திகதி வீட்டில் குழந்தை பிரசவித்துள்ளார். அதனை அடுத்து அவருக்கு அதிக இரத்த போக்கு ஏற்பட்டமையினால் , மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையின் போது குழந்தை பிரசவித்தீர்களா ? என வைத்தியர்கள் கேட்டபோது , ஆரம்பத்தில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளார்.

இறுதியாக குழந்தை பிரசவித்ததை ஏற்றுக்கொண்ட அவர் , குழந்தையை தூக்கும் போது , கை தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாகவும் , குழந்தையின் சடலம் வீட்டிலையே உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதனை அடுத்து வைத்தியர்கள் வீட்டாரிடம் குழந்தையின் சடலத்தை உடனடியாக வைத்திய சாலையில் ஒப்படைக்குமாறு பணித்தனர்.

குழந்தையின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதும் , பிரதே பரிசோதனை மேற்கொண்ட போது குழந்தையின் தலையில் அடிகாயம் இருந்தமை உறுதியாகியது.

இந்நிலையில் குறித்த பெண் திங்கட்கிழமை வைத்திய சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பி இருந்தார்.

இந்நிலையில் அவர்களின் வீட்டுக்கு சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் தம்பதிகளை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here