யாழில் வாள்வெட்டில் துண்டாடப்பட்ட கை 6 மணிநேர போராட்டத்தின் மீள பொருத்தப்பட்டது!

0

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இரவு வாள்வெட்டுக்குழுவின் தாக்குதலில் ஒருவரின் கை துண்டாடப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் மீள பொருத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம், கோண்டாவில், செல்வபுரம் பகுதியிலுள்ள வீடியோ எடிட்டிங் செய்யுமிடத்திற்குள் நேற்றிரவு புகுந்த அடையாளம் தெரியாத ரௌடிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் காயமடைந்தனர்.

5 பேர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது இடதுகை மணிக்கட்டுடன் துண்டாடப்பட்டது.

இந்த நிலையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன் தலைமையிலான வைத்தியர் குழு மேற்கொண்ட தீவிர சிகிச்சையை தொடர்ந்து அவரது கை மீள பொருத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றப்பட்டு கொழும்பில் பணியாற்றி வந்த வைத்தியர் இளஞசெழிய பல்லவன், கடந்த சில தினங்களின் முன்னரே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மீள இடமாற்றம் செய்யப்பட்டார்.

ஏற்கனவே, விசுவமடு பகுதியில் வாள்வெட்டு கும்பலின் தாக்குதலில் இரண்டு கைகளும் பாதிக்கப்பட்ட ஒருவரின் கைகளையும் இளஞ்செழிய பல்லவன் பொருத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here