யாழில் மேலுமொரு கடலாமை கரையொதுங்கியது

0

யாழ்ப்பாணம், வேலணை – துறையூர் கடற்கரையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த கடலாமை இறந்த நிலையில் இன்றைய தினம் (04) கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் கரை ஒதுங்கிய கடலாமையை இனங்கண்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவித்தனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எரிந்த நிலையில் அதன் பின்னரான காவப்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.

இதுவரையில் தீவகப் பகுதிகளில் ஒரு திமிங்கலம், ஒரு டொல்பின் மற்றும் மூன்று கடலாமைகள் ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here